Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

Mahendran
புதன், 23 ஏப்ரல் 2025 (10:05 IST)
தமிழகத்தில் இதுவரை மூன்றாவது அணி பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், முதல் முறையாக விஜய், சீமான், அன்புமணி, பிரேமலதா ஆகிய நால்வரும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்க இருப்பதாகவும், இந்த கூட்டணி திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்ததால், சில கட்சிகள் அந்த கூட்டணியில் இணைய தயக்கம் காட்டி வருகிறது. அதே நேரத்தில், திமுக கூட்டணியில் இடம் இல்லை என்பதால் அங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, விஜய் மற்றும் சீமான் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைந்தால், அந்த கூட்டணியில் இணையலாம் என்று அன்புமணி, பிரேமலதா முடிவு செய்திருப்பதாகவும், இந்த கூட்டணியில் இணைந்தால் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
மூன்றாவது அணி குறித்த பேச்சு வார்த்தைகள் திரைமறைவில் நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
ஒரு பக்கம், அதிமுக கூட்டணி; இன்னொரு பக்கம், திமுக கூட்டணி வலிமையாக இருந்தாலும், மூன்றாவது கூட்டணியும் அந்த கூட்டணிகளுக்கு சமமாக இருக்கும் என்று கூறப்படுவதால், 2026 ஆம் ஆண்டு தேர்தல் உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments