Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களை வாட்டும் குளிர்..! டெல்லியில் விமான சேவை பாதிப்பு.! பயணிகள் அவதி.!!

Senthil Velan
புதன், 17 ஜனவரி 2024 (11:08 IST)
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 58 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. குளிருடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால், டெல்லி பாலம் மற்றும் சஃப்டர்ஜங் விமான நிலையங்களில் காணும் திறன் 500 மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது.
 
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 170க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 58 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக் கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு.! காளைகள் முட்டியதில் 19 பேர் காயம்.!!
 
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,  பஞ்சாப், அரியானா சண்டிகர், டெல்லி, உத்திரபிரதேசத்தில் மூன்று நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும் எனவும்
ராஜஸ்தான், பீகார், சிக்கிம், அசாம், மேகாலயா, மணிப்பூரிலும் பனி நீடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments