விரைவில் உள்நாட்டு கட்டணம், வெளிநாட்டு கட்டணங்களை மாற்றி அமைத்து விமான நிறுவனங்கள் கட்டண விவரங்களை வெளியிட உள்ளது.
கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுவரும் ரஷ்யா ஒரு சில முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து பெரும்பாலான நாடுகளில் மீண்டும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. இதன் வெளிபாடாக கச்சா எண்ணெயின் விலையோடு விமான எரிபொருள் விலையும் உயர்ந்து வருகிறது.
இதனால் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப். எனும் பெட்ரோலிய எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரத்தின் படி விமான எரிபொருளின் விலை நேற்று 18 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ லிட்டருக்கு 18.3 % அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.1,10,666.29 ஆக உள்ளது. எனவே விமான டிக்கெட் கட்டணங்கள் உயருகிறது.
விரைவில் உள்நாட்டு கட்டணம், வெளிநாட்டு கட்டணங்களை மாற்றி அமைத்து விமான நிறுவனங்கள் கட்டண விவரங்களை வெளியிட உள்ளது. தற்போது ஒரு கிலோ லிட்டர் ஏ.டி.எப். விலை டெல்லியில் ரூ.1,09,119.83 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,14,979.7 ஆகவும் நிர்ணம் செய்யப்பட்டுள்ளது எனது கூடுதல் தகவல்.