Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (16:32 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உத்தரபிரதேசம் மாநிலத்தின்  அமைந்துள்ள ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில், ஐந்து கைதிகளுக்கு எச்ஐவி நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரி ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
 
இது குறித்து சிறையின் மருத்துவர் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது பாதிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் தங்கள் உடலில் பச்சைக் குத்தியதாகவும், ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு எச்ஐவி நோய் பரவியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
 
இதனை அடுத்து, எச்ஐவி பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிறப்பு உணவு மற்றும் மருந்து வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் பேருக்கும் அதிகமாக அடைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் ஏற்கனவே ஒன்பது பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு மேலும் பரபரப்பு உருவாகியுள்ளது.
 
 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: அரசுக்கு விஜய் வலியுறுத்தல்..!

குவைத் செல்லும் விமானங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன.. என்ன காரணம்?

தவம் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

2 ஆண்டுகள் பண பரிவர்த்தனை இல்லையெனில் வங்கி கணக்கு மூடப்படும்: ஆர்பிஐ

நடிகை வைஜெயந்திமாலாவுக்கு என்ன ஆச்சு? மருமகள் கொடுத்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments