Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான மத்திய இணையமைச்சர்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (21:26 IST)
முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான மத்திய இணையமைச்சர்!
மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு பலியாகியுள்ளதை அடுத்து முதன்முறையாக மத்திய இணையமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் அங்கடிக்கு அஞ்சலி செலுத்து சக எம்.பிக்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
 
65 வயதான சுரேஷ் அங்கடி கர்நாடகா மாநிலத்தின் பெலகாவி என்ற தொகுதியில் இருந்து 4வது முறையாக மக்களவைக்கு தேர்வாகியிருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் 4வது எம்.பி இவர் என்பதும், ஏற்கெனவே வசந்தகுமார், துர்கா பிரசாத், அசோக் கஸ்தி ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments