Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆலையில் தீ விபத்து

Advertiesment
Fire at HPCL plant
, புதன், 26 மே 2021 (09:20 IST)
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே மல்கபுரத்தில் உள்ள எச்.பி.சி.எல்) ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. 

 
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே மல்கபுரத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்) ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நிர்வாகம் மாவட்டத்தின் பல்வேறு தொழில்துறை பிரிவுகளிலிருந்து தீயணைப்பு துறை விரைந்து வந்து இந்த தீயை அணைத்தது.
 
இந்திய கடற்படையைச் சேர்ந்த வல்லுநர்கள் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கையிலெடுத்து நிர்வாகத்திற்கு உதவியது. இதனால் தீ விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பிற்கு மாற்றப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் - ஸ்டாலின்!