Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்க்க வைத்து நீட் தேர்வின் போது அராஜகம்!

மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்க்க வைத்து நீட் தேர்வின் போது அராஜகம்!

மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்க்க வைத்து நீட் தேர்வின் போது அராஜகம்!
, திங்கள், 8 மே 2017 (11:45 IST)
மருத்துவப் படிப்பிற்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின் போது ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தது என குற்றம் சாட்டப்பட்டது. இதில் உச்சக்கட்டமாக கேரளாவில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற வைத்ததாக கூறப்படுகிறது.


 
 
இந்தியாவின் 103 நகரங்களில் 2204 தேர்வு மையங்களில் நேற்று நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சம் மாணவர்கள் இதில் கலந்து கொண்டதாகவும், தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளும், கெடுபிடிகளும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தேர்வு எழுது வர மாணவர்களை மனதளவில் பாதிப்பதாக அமைந்ததாக கூறப்படுகிறது.
 
மாணவிகளின், காது தோடு, ஹேர்ப்பின், கொலுசு போன்றவை அகற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் முழு கை சட்டை அணிந்து வந்ததால் அவர்களின் சட்டை கத்திரிக்கோலால் வெட்டப்பட்டு அரை கை சட்டையாக மாற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
 
இதில் உச்சக்கட்டமாக கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ளாடைகளை கழற்றிய பின்னரே மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். தேர்வு எழுத சென்ற மாணவிகள், திரும்ப வந்து உள்ளாடைகளை அளித்துவிட்டு சென்றதாக ஊடகங்களில் மாணவிகளின் பெற்றோர்கள் கூறினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுறாக்களுடன் புகைப்படம்: பலான பட நடிகைக்கு நேர்ந்த அவலம்! (வீடியோ)