Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பமாக இருந்த யானையுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டதால் பெண் யானை பரிதாப சாவு

Advertiesment
கர்ப்பமாக இருந்த யானையுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டதால் பெண் யானை பரிதாப சாவு
, திங்கள், 11 ஜூலை 2016 (15:57 IST)
மைசூரு தசரா விழா நெருங்கி வருவதால், யானைகளை பராமரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. யானைகளுக்கு ராஜ மரியாதை கொடுத்து கவனித்து வரும் வேளையில் யானைகள் முகாமில் பெண் யானை ஒன்று பரிதாபமாக இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
 
யானைகள் பராமரிப்பு முகாமில் அம்பாரியை சுமந்து வரும் அர்ஜூனா யானை கர்ப்பமாக இருந்த ஒரு பெண் யானையுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயன்றது. இதில், பெண் யானை அதிக அளவிலான ரத்த போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தது.
 
காயங்களுடன் மயங்கி விழுந்த அந்த பெண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. யானை உயிரிழந்தது குறித்து வனத்துறை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் வந்து யானையை கால்நடை மருத்துவர்கள் மூலம், பிரேத பரிசோதனை செய்து பின்னர் அடக்கம் செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது