பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்.. கையில் எழுதி வைத்து தற்கொலை.

Siva
வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:32 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் காவல்துறை அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் என்பவர்தான் காரணம் என்றும், அவர் என்னை நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும், ஐந்து மாதங்களுக்கு மேலாக என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்" என்றும் தனது உள்ளங்கைகளில் எழுதி வைத்து, அதன் பின் தற்கொலை செய்துள்ளார்.
 
பல மாதங்களாக அந்த பெண் மருத்துவர் காவல்துறை அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்.. கையில் எழுதி வைத்து தற்கொலை.

கரூர் துயர சம்பவம்.. 41 குடும்பத்தினர்களை சென்னையில் சந்திக்கின்றாரா விஜய்?

நண்பன் என்றால் நண்பனாக இருப்போம், துரோகி என்றால் காலில் மிதிப்போம்: செல்லூர் ராஜூ

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000: இந்த ஒரு பிரிவினர்களுக்கு மட்டும் கிடையாதா? தமிழக அரசின் புதிய முடிவு?

அடுத்த கட்டுரையில்