பாகிஸ்தானுக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்: காங்கிரஸ் பிரபலம்..!

Mahendran
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (16:28 IST)
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு சென்றபோது, தான் சொந்த நாட்டில் இருப்பதை போலவே உணர்ந்ததாகக் காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில்  செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில் பேசியதாவது:
 
நமது வெளியுறவு கொள்கை முதலில் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். நான் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கு நான் ஒருபோதும் வெளிநாட்டில் இருப்பதாக உணர்ந்ததில்லை, சொந்த வீட்டில் இருப்பதை போலவே உணர்ந்தேன்."
 
இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பிரதமர் மோடி மாற்றிவிட்டதாக பாஜக செய்யும் பிரச்சாரங்கள் போலியானவை. மோடி விஸ்வ குரு அல்ல. நமது அடுத்த தலைமுறையினரை தேர்தல்கள் அதிகம் பாதிக்கின்றன. ராகுல் காந்தியின் பேச்சுகள் உண்மையானவை. ஆனால், அவர் ஒருவரால் மட்டும் இதை செய்ய முடியாது. இளைஞர்கள், வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஜனநாயகத்தை காக்க ராகுல் காந்தியின் குரலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்."
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments