Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேடையில் மயங்கி விழுந்த மத்திய மந்திரி : கவர்னர், மாணவர்கள் அதிர்ச்சி...

Advertiesment
மேடையில் மயங்கி  விழுந்த மத்திய மந்திரி : கவர்னர், மாணவர்கள் அதிர்ச்சி...
, வெள்ளி, 7 டிசம்பர் 2018 (18:30 IST)
மாகாராஷ்டிர மாநிலம் அஹமது நகர் மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலையில் பட்டமளிப்பு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில்  சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மாநில ஆளூநர் வித்யாசாகர் ராவ் போன்றோர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழா தொடங்கியதும் மேடையில்  நின்றிருந்த அருண்கட்காரி திடீரென்று மயங்கி தன் இருக்கையில் விழுந்தார்.
 
ஆனால் எந்த அசம்பாவிதமும் நடக்காதபடி அருகில் நின்றுகொண்டிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் காவலர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர்.
 
அதனைதொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. விழா முடிவடைந்த பின் கட்காரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியதாவது:
 
ரத்தத்தில் சக்கரை அளவு குறைந்ததே கட்காரி திடீரென மயங்கி விழுந்ததற்கு காரணம் இவ்வாறு தெரிவித்தார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸா? பாஜகவா? தேர்தல் முடிந்த கையோடு வெற்றி கருத்து கணிப்பு வெளியீடு!