Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேபிட் டெஸ்ட் கிட் திருப்பி அனுப்பப்படும்: ஹர்ஷ்வர்தன் பேட்டி!!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (17:14 IST)
பழுதான ரேபிட் டெஸ்ட் கிட் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் கொரோனாவைக் கண்டறியப்படும் பிசிஆர் முறை பின்பற்றப் பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  
 
ரேபிட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொண்டால் 6 முதல் 71 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் காட்டுவதாக சில மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை அடுத்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. 
 
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழுதான் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்படும். 
 
கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments