இந்தியாவில் பப்ஜி கேமுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஃபாஜி கேமிற்கான முன்பதிவு புதிய சாதனையை படைத்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து பல சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதில் இளைஞர்களின் விருப்பமான விளையாட்டான பப்ஜியும் ஒன்று. இந்நிலையில் பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவை சேர்ந்த என் கோர் நிறுவனம் ஃபாஜி என்ற விளையாட்டை உருவாக்கியுள்ளது.
இந்திய எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் கேம்பிளே நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேமிற்கான முன்பதிவு ப்ளே ஸ்டோரில் தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாஜிக்கு முன்பதிவு செய்துள்ளனர் என என் கோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.