Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சான்றிதழ்களில் இனி அப்பா பெயர் கட்டாயமில்லை

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (21:10 IST)
கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அப்பா பெயர் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்ற நடைமுறையை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.


 

 
பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களில் மாணவ, மாணவிகளின் தந்தை பெயர் கட்டாயமாக பதிவு செய்யவேண்டும். இதுதொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி மனித வள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். 
 
அதில், இன்று அதிகளவில் கணவன், மனைவி பிரிந்து வாழும் சூழல் உள்ளது. அம்மாவுடன் வாழும் குழந்தைகள் அதிகம் உள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தந்தை பெயரை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்ற நிலை உள்ளது. இது குழந்தைகளுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தந்தை பெயர் குறிப்பிடுவதை விருப்பமாக மாற்ற வேண்டும், என்று எழுதியிருந்தார்.
 
இவரது இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இனி மாணவ, மாணவிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏறப் தாய் அல்லது தந்தை பெயரை குறிப்பிடலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments