Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறந்த மகளின் சடலத்தை 8 கி.மீ. சுமந்து சென்ற தந்தை

Advertiesment
இறந்த மகளின் சடலத்தை 8 கி.மீ. சுமந்து சென்ற தந்தை
, சனி, 20 அக்டோபர் 2018 (09:44 IST)
ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் ஒடிசாவில் தந்தை ஒருவர் இறந்த மகளின் சடலத்தை 8 கி.மீ தூக்கி சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
ஒடிசாவில் ஏற்பட்ட "டிட்லி" புயல் காரணமாக கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி முகுந்த் டோரா என்பவரது மகள் பபிதா காணாமல் போனார்.
 
இந்நிலையில் பபிதாவின் உடல் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முகுந்த் மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினார். ஆனால் அவர்கள் பணம் செலுத்தினால் தான் ஆம்புலன்ஸை தர முடியும் என திட்டவட்டமாக கொல்லிவிட்டனர்.
 
இதனால் வேறுவழியின்றி அவர் தனது மகளின் உடலை 8 கிலோமீட்டர் தூரம் வரை சுமந்து சென்றார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகவே இதுகுறித்து விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் ரெடி அவர் ரெடியா? சவால் விடும் அமைச்சர் உதயகுமார்