Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுமணத்திற்கு தடையாக இருந்த மகன்.. சுட்டு கொலை செய்த 76 வயது தந்தை..!

Mahendran
செவ்வாய், 11 மார்ச் 2025 (15:28 IST)
மறுமணம் செய்வதற்கு தனது மகனே தடையாக இருந்த நிலையில், பெற்ற மகனை கொலை செய்த 76 வயது நபர் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியில் சேர்ந்த 76 வயது ராம் போச்சா என்பவருக்கு 52 வயது மகன், மருமகள், பேரன் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில், தந்தையும் மகனும் வெவ்வேறு வீடுகளில் வசித்தாலும், அவ்வப்போது மகன் பிரதாப் தந்தையை சந்தித்து வருவார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி இறந்துவிட்ட நிலையில், ராம் போச்சா தனியாக வசித்து வந்தார். பின்னர், மறுமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தார். இதனை மகனிடம் தெரிவித்தபோது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

திருமண வயதில் பேரன் இருக்கும் நிலையில், தாத்தா மறுமணம் செய்தால் ஊரில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கோபமடைந்த பிரதாப், தனது தந்தையிn முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ராம் போச்சா மிகவும் கோபமடைந்தார்.

திடீரென, துப்பாக்கியை எடுத்து தனது மகனை சுட்டு கொலை செய்தார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு மருமகள் மற்றும் பேரன் வந்து பார்த்தபோது, பிரதாப் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராம் போச்சாவை கைது செய்தனர். விசாரணையின் போது, அவர் தனது மகனை கொலை செய்ததற்காக எந்த வருத்தமும் இல்லை என்றும், மகன் பல நாட்கள் தன்னை துன்புறுத்தி வந்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்