Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளை கொன்று காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை!!

மகளை கொன்று காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை!!
, வியாழன், 23 மார்ச் 2017 (12:46 IST)
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளின் கொலை செய்து, அவளது உடலை காதலின் வீட்டு வாசலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
முசாபர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் குரேஷி. இவர் ஒரு துணி வியாபாரி. இவரது 15 வயது மகள் குல்ஸாபா யாரோ ஒருவருடன் வீட்டில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த குரேஷியின் மனைவி, மகளையம் அந்த நபரையும் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து அதே போகுதியில் வசித்து வரும் தில்நவாஸ் அகமத்தை குரேஷி வீட்டிற்குள் வைத்து பூட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் குரேஷியின் எதிர்ப்பை மீறி அகமதை மீட்டுச் சென்றனர்.
 
இச்சம்பவத்தால் அவமானப்பட்ட குரேஷி ஆத்திரத்தில் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவளது உடலை அகமத்தின் வீட்டு வாசலில் வீசிவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். 
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க.ஸ்டாலின் கனவு தகர்ந்தது - சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி