Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலுக்கு எதிர்ப்பு: மகளை கொன்ற தந்தை

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (12:03 IST)
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை, தந்தை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது.


கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜன்- சுமிதா தம்பதி, இவர்களது மகள் ஆதிரா (22). அங்குள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது.
 
இவர்கள் காதல் விவகாரம் ஆதிராவின்  தந்தைக்கு தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அவர்களது காதலுக்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
 
இதனால் அவர்களது காதல் விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. போலீசார் ஆதிரா மேஜர் என்பதனால் அவர்களது பெற்றோரை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில், அவரது கல்யாணம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த கல்யாண தகவலை கேட்டு கோபமடைந்த அவரது தந்தை நேற்று ஆதிராவை கத்தியால் குத்தி கொன்றார். இதனால் போலீசார் ஆதிராவின் தந்தை ராஜனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் அவசரம் காட்டினோமா? சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments