Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டம் திரும்பப்பெறாது... விவசாய சங்க தலைவர் அறிவிப்பு!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (13:30 IST)
விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டும் என  விவசாய சங்க தலைவர் பேட்டி. 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 
விவசாயிகளின் ஆறு அம்ச கோரிக்கைகளில் ஐந்துக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதனிடையே விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள விவசாய சங்கத்தினர் இன்று பிற்பகல் இது குறித்து ஆலோசனையில் ஈடுப்பட்டனர். 
 
இதன் பின்னர் விவசாய சங்க தலைவர் குர்நாம் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும். விவசாயிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெரும் முன் போராட்டத்தை கைவிட்டால் அது எங்களுக்கு சிக்கலாகும்.
 
எனவே விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் போராட்டங்களை கைவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கச்சத்தீவு தீர்மானம் ஒரு நாடகம்.. 4 வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஈபிஎஸ்

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments