டெல்லியில் கடந்த சில நாட்களாக இரண்டாவது கட்டமாக தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த போராட்டம் நேற்று திடீரென புதுச்சேரி துணை நிலை ஆளுனருக்கு எதிராக திரும்பியது. விவசாயிகள் கடன் ரூ.20 கோடி தள்ளுபடி செய்ய புதுச்சேரி அரசு அனுமதித்துள்ள நிலையில் அந்த கோப்பில் கவர்னர் கிரண்பேடி கையெழுத்து போடாததால் அவருக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு நேற்று முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று ஆதரவு கொடுத்தார். ஏற்கனவே புதுச்சேரி முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் கவர்னருக்கு எதிரான போராட்டத்தை முதல்வரே தூண்டினாரா? என்பது உள்பட பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்.