வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. தமிழகத்தில் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது போலவே நாட்டின் பல மாநிலங்களிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது
இந்த நிலையில் ஏற்கனவே போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த் சமீபத்தில் நடத்தப்பட்ட நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் பாஜக அலுவலகங்களை மூடும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விவசாயிகள் அறிவித்தனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை விவசாயிகள் அறிவித்துள்ளனர், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் மறியல் போராட்டம் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன
தங்களது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க முன்வராததால் ரயில் மறியல் போராட்டம் நடத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதால் மத்திய அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது