Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டத்தை ஒடுக்க நினைச்சா பயிர்களை எரிப்போம்! – விவசாய அமைப்புகள் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:30 IST)
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் டெல்லியில் நடந்து வரும் நிலையில் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் பயிர்களை அழித்து விடுவோம் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ட்ராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் போராட்டம் குறித்து பேசியுள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் சிங் திவைத் ”இரண்டு மாதங்களில் போராட்டம் முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். பயிர் விலைகள் உயர்த்தப்படவில்லை. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருந்தால் தேர்தல் நடக்க உள்ள மேற்கு வங்கத்திற்கும் போராட்டத்தை நீட்டிப்போம். அரசு எங்கள் போராட்டத்தை முடக்க நினைத்தால் பயிர்களை எரித்து விடுவோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments