Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸார் நடத்திய தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு?

Sinoj
புதன், 21 பிப்ரவரி 2024 (19:04 IST)
ஹரியானாவில் போலீஸார் நடத்திய தாக்குதலில் 24 வயது சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறினர்.
 
டெல்லியை  நோக்கி விவசாயிகள் முன்னேறியபோது அம்பாலா எல்லையில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
 
அதன்பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசை எச்சரித்தனர்.
 
இந்த நிலையில், மத்திய அரசு விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்த  நிலையில்  அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள், தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஹரியானாவில் போலீஸார் நடத்திய தாக்குதலில் 24 வயது சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
 
சுப்கரன் சிங் தலையில்  சுடப்பட்டு உயிரிழந்ததாக விவசாய சங்கத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 
எனினும் ஹரியானா போலீஸார் இதை மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments