Publish Date: Sun, 25 Nov 2018 (08:53 IST)
Updated Date: Sun, 25 Nov 2018 (08:59 IST)
பிரபல கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான அம்ரிஷ் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
நடிகர் அம்பரீஷ்(66) கன்னட திரையுலகில் மிகப்பிரபலமான நடிகர் ஆவார் . இவர் நடிகர் மட்டுமில்லாது அரசியலிலும் நுழைந்து ஒரு கலக்குகலக்கியவர். இவர் மத்திய மற்றும் மாநில அமைச்சராக இருந்துள்ளார்.
சமீப காலமாக இவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதற்காக அவர் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவரது மறைவிற்கு பல்வேறு நடிகர்களும், திரைத்துறை பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.