மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு போலி மருத்துவர் நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் ஏழு பேர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ என்ற நகரில் தனியார் மருத்துவமனையில் இதயவியல் நிபுணர் என்று ஜான் கெம் என்பவர் பணிபுரிந்தார். இந்த நிலையில் அவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவமனையில் சேர்ந்து இதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு செய்ததாகவும் அவர் அறுவை சிகிச்சை செய்த ஏழு பேர் உயிரிழந்ததாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் மீது சந்தேகம் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்க காவல்துறையினர் அவருடைய ஆவணங்களை சோதித்துப் பார்த்தபோது அவை போலி என தெரிய வந்தது.
இந்த நிலையில் போலி மருத்துவர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.