Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் போலி ஆன்லைன் டிக்கெட்டுக்கள்: போலீசார் தீவிர விசாரணை!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (08:52 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூபாய் 300 தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ரூ.300 தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்று வர வேண்டும் என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் சில நிபந்தனைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் பெற்று வந்தவர்களில் ஒரு சிலர் போலி டிக்கெட்டுகளை வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து திருப்பதி கோயில் ஆன்லைன் டிக்கெட்டுகளை போலியாக தயாரித்து மோசடி செய்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் 
 
இந்த விவகாரத்தில் தேவஸ்தான ஊழியர்களுக்கு சம்பந்தம் உண்டு என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே பக்தர்களுக்கு கேட்டுக் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments