Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்டிபயாடிக் மருந்தில் முகப்பவுடர்: போலி மருந்துகள் தயாரித்த கும்பல் கண்டுபிடிப்பு..!

Fake Medicines

Mahendran

, புதன், 25 செப்டம்பர் 2024 (11:43 IST)
ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளில் மருந்துகளுக்கு பதில் முகப்பவுடர் சேர்த்து விற்பனை செய்த போலி மருந்து கும்பலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளில் முகப்பவுடர் மற்றும் ஸ்டார்ச் கலந்து விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மட்டுமின்றி உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் இந்த முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. "ஆன்ட்டிபயாட்டிக் மருந்து" என்று கூறப்பட்ட மருந்துகள் உண்மையில் மருந்து அல்ல, அது முகப்பவுடர் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரித்துவாரில் உள்ள கால்நடை மருத்துவ ஆய்வகத்தில் தான் இந்த போலி ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கின்றன. இந்த குற்றப்பத்திரிகையில் 12க்கும் மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

போலி மருந்துகள் தயாரிப்பதன் மூலம் இந்த கும்பல் 15 முதல் 16 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளதாகவும், இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இதன் மூலம் கிடைத்த பணத்தை ஹவாலா மூலம்  கைமாறியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் பலி: கணவர், மாமனார் கைது!