Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து குவியும் புகார்கள்; பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு!

தொடர்ந்து குவியும் புகார்கள்; பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு!
, ஞாயிறு, 31 ஜனவரி 2021 (16:37 IST)
சர்ச்சைக்குரிய பதிவுகளில் பெரு நிறுவனங்களின் விளம்பரங்கள் வெளியாவது உள்ளிட்டவற்றை தடுக்க பேஸ்புக் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூக வலைதள புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் சர்ச்சைக்குரிய தகவல்கள், பதிவுகள் பகிரப்படுவது சமூக வலைதளங்கள் மீது விமர்சனத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை தணிக்கை செய்வது குறித்து உலகளவில் பெரும் விவாதம் எழ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஜார் ப்ளாய்ட் கொல்லப்பட்ட பிரச்சினையின்போது அதுகுறித்த சர்ச்சைக்குரிய பதிவுகளில் கோலா கோலா, ஸ்டார்பக்ஸ் நிறுவன விளம்பரங்கள் தோன்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்நிறுவனங்கள் பேஸ்புக்கை விட்டு வெளியேறின. இந்நிலையில் தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் எழுவதை தவிர்க்க Topic exclusion control என்ற வசதியை பேஸ்புக் உருவாகி வருகிறது. விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்களுடன் தோன்றும் சில வகையான கருத்துக்களை/ கன்டென்ட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்த இந்த திட்டத்தை தொடங்குகிறது ஃபேஸ்புக்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இட ஒதுக்கீடு லேட் ஆகும்னா உள் ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பிருக்கா? – அரசுடன் டீல் பேசும் பாமக!