சீனா திட்டமிட்டே தாக்கியது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (19:55 IST)
இந்தியா மற்றும் சீனா எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இரு நாட்டின் ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயங்கர மோதல் இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை கம்பி உள்பட பல்வேறு ஆயுதங்களால் பயங்கரமான தாக்கியதால் இருதரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் 20 இந்திய வீரர்களும் 35 சீன வீரர்களும் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய-சீன விவகாரம் குறித்து முதல்முறையாக தொலைபேசியில் பேசி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்  ஒப்பந்தத்தை மீறி சீனா நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார் 
 
ஏற்கனவே இந்தியாதான் எல்லையை மீறி தாக்கியதாக சீனா குற்றம்சாட்டிய நிலையில் தற்போது சீனாதான் எல்லையை மீறிய தோடு ஒப்பந்தத்தை மீறி தாக்கியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments