Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

அரசு தேர்வில்  100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

Siva

, புதன், 18 டிசம்பர் 2024 (08:20 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு தேர்வு எழுதிய ஒரு தேர்வர் 100க்கு 101.66 மதிப்பெண் எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து முறைகேடு நடந்ததாக கூறி, தேர்வர்கள் அனைவரும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் வன காவலர், களக்காவலர், மற்றும் சிறை காவலர் பணியிடங்களுக்கு மாநில அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது.

அதில் தேர்வு எழுதிய ஒருவர் 100க்கு 101.66 மதிப்பெண்கள் பெற்றது மட்டுமின்றி, தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்றிருந்தார். இதனால் மற்ற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தபோது, தேர்வு முடிவு அறிவிப்பு பிறகு தேர்வு குழு விதிகளின்படி ஆட்சி ஏற்பில் சாதாரண மயமாக்கல் காரணமாக கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டு இருக்கலாம் என்று கூறினர். இதனால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் முழு மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருக்கலாம் என்றும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.

ஆனால், தேர்வு எழுதிய தேர்வர்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டனர். "ஒருவர் மொத்த மதிப்பெண்களை விட அதிகமாக பெற்றது வரலாற்றில் இது முதல் முறை. நியாயமற்ற இந்த செயல்முறைக்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்கள் போராட்டம் மேலும் வலுக்கும்," என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்