Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரிகளை துப்பாக்கிக் காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர் – வெளியான வீடியோ!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (09:32 IST)
தெலங்கானாவில் நிலத்தில் கால்வாய் பணிகளை விரிவாக்க வந்த அரசு அதிகாரிகளிடம் முன்னாள் அமைச்சர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நலகொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா என்ற பகுதியில் கால்வாய் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்தி நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அரசு அதிகாரிகள் காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் ரெட்டியிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்தில் கால்வாய் அமைக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் துப்பாக்கியை காண்பித்து அதிகாரிளை பணி செய்யவிடாமல் தடுத்தார். இதனை வீடியோ எடுத்த அதிகாரிகளையும் அவரது சொந்தக்காரர்கள் தாக்கியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் அங்கிருந்து ஓட ஆரம்பித்துள்ளனர். நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments