Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புனித் ராஜ்குமாரால் அதிகரித்த கண் தானம்! – 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் பதிவு!

Advertiesment
புனித் ராஜ்குமாரால் அதிகரித்த கண் தானம்! – 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் பதிவு!
, செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:45 IST)
நடிகர் புனித் ராஜ்குமார் இறந்து 15 நாட்களுக்கு 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் இறக்கும் முன்னதாக அவரது கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவரது கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றனர்.

இதை தொடர்ந்து புனித் ராஜ்குமார் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கண் தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இவ்வாறாக கடந்த 15 நாட்களுக்குள் கர்நாடகாவில் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறப்பு!