Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு!
, செவ்வாய், 15 மார்ச் 2022 (10:19 IST)
வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகள் படித்த இந்திய இளைஞர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்வதற்கான FMGE நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த நிலையில் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவு தேர்வு ஜூன் 4ம் தேதி நடைபெறும் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 
மேலும் FMG தேர்வு எழுத  ஏப்ரல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த விண்ணப்பத்தை  https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 30ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகா ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு: பல நகரங்களில் 144 தடை!