Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி விஷம் குடித்து தற்கொலை

Webdunia
திங்கள், 8 மே 2023 (18:34 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் நிச்சயமான ஜோடி ஒன்று ஒரு ஹோட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சன்வர் சாலை  என்ற பகுதியில் வசித்து வந்தவர் கபில் சாகு(25).  சமீபத்தில் இவருக்கு  நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், கபில் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு,  காலையில் விஜய் நகர் பகுதிக்குச் சென்றார். பின்னர், மதியம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

ஆனால் போனை எடுக்காததால், கபிலின் தந்தை மற்றும் உறவினர்கள்  மாலையில் சம்பவ  இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, ஓட்டல் கதவை ஊழியர்கள் உதவியுடன் திறந்து அறைக்குள் சென்றபோது, கபில் மற்றும்  நிஷா இருவரும் சுய நினைவற்று கிடந்தனர்.

அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.  ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments