Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அறிக்கை: மக்களிடம் ஆலோசனை கேட்கும் பாஜக!

Sinoj
திங்கள், 26 பிப்ரவரி 2024 (18:22 IST)
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
  
நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பிரதமர் மோடி, அண்ணாமலையில் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கவுள்ளார் என தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில்,  பாஜக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என தெரிகிறது.
 
இந்த நிலையில், தேர்தலில் முக்கிய அம்சமான தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஒவ்வொரு கட்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜகவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது.
 
தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய வீடிவோவை ஒளிபரப்பும்  பிரசார வேன்களை அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  அதேபோல் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியையும் தொடங்கி வைத்தார்.
 
அப்போது பேசிய அவர்,'' பிரதமர் மோடி  செய்த சாதனைகளை இந்த வீடியோ வேன்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க பாஜக முடிவெடுத்துள்ளது.  2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருவதால் இதுபற்றி ஆலோசனைகள் பொதுமக்கள் வழங்க வேண்டும்'' என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments