Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டை முடக்கப்பட்டால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? தேர்தல் ஆணையம் விளக்கம்..!

Mahendran
புதன், 28 பிப்ரவரி 2024 (11:54 IST)
மேற்குவங்க மாநிலத்தில் பலருடைய ஆதார் அட்டை முடக்கப்பட்டதால் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலை இருப்பதாக  திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டிய நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
 
இதுகுறித்து  தேர்தல் ஆணையர் ராஜீவ் கூறியபோது, ‘ முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது, அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து தேர்தலின்போது வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
 
முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர் ராய் இதுகுறித்து கூறியபோது, ‘மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன, வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 500 வாக்காளர்களின் ஆதார் எண்கள் மேற்கு வங்கத்தில் முடக்கப்பட்டுள்ளன. இது சட்டவிரோதம். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments