கொரோனா பரவல் அச்சம் காரணமாக இடைத்தேர்தல்களை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருப்பதால் இடைத்தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் அதில் இடைத்தேர்தல் நடத்திவிட வேண்டும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடக்க இருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.