Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் 15 தொகுதிகளின் இடைத்தேர்தல் ரத்து –தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (14:03 IST)
கர்நாடகாவில் நடக்க இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மஜத ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளையும் சேர்ந்த 17 ராஜினாமா செய்ய முயன்றனர். ஆனால் அவர்களின் ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகர் ரமேஷ் குமார், அந்த 17 பேரையும்  கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக அந்த 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்நிலையில் அந்த 17 தொகுதிகளில் 2 தொகுதிகள் தவிர்த்து மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தங்களை அனுமதிக்க வேண்டுமென அந்த 17 எம்.எல்.ஏ.க்களும்  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தகுதிநீக்கம் சம்மந்தமான வழக்கில் தீர்ப்பு வரும் வரை இடைத் தேர்தலை ஒத்தி வைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments