மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏவான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களைத் திரட்டி திடீரென அரசுக்கு வாபஸ் வாங்கியதால் அம்மாநிலத்தில் சிவசேனா ஆட்சி கவிழ்ந்தது முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார்
இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராகவும் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது
இதனை அடுத்து கோவாவில் உள்ள சொகுசு விடுதியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் நடனமாடி இதனை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.