பாக்கதானே போறீங்க என்னோட ஆட்சியை – எடியூரப்பா அத்தியாயம் ஆரம்பம்

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (18:36 IST)
இன்னும் மூன்று மாதங்களில் முந்தைய ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை நான் கொடுத்ததாக மக்களே பேசுவார்கள் என்று எடியூரப்பா பேசியுள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிந்ததையடுத்து இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார் எடியூரப்பா. ஆளுனர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்க இருக்கும் நிலையில், முன்னதாக பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசினார் எடியூரப்பா.

அப்போது “எப்போது இந்த ஆட்சி கவிழும் என்று நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் இன்று வந்துவிட்டது.

எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்து கொள்ள போவதில்லை. அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி வழங்குவதே எங்கள் நோக்கம்.

இன்னும் மூன்றே மாதங்களில் கடந்த ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை நான் கொடுத்ததாக மக்களே பேசுவார்கள்” என அவர் கூறினார்.

பிறகு பதவியேற்க ஆளுனர் மாளிகைக்கு கிளம்பினார் எடியூரப்பா. மாலை 6 மணியளவில் ஆளுனர் வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா மட்டும் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்.. 60 சதவிகிதத்தை தாண்டிய வாக்கு சதவீதம்.. இன்னும் சில நிமிடங்களில் கருத்துக்கணிப்பு..!

அஜித் வீடு, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கோலிவுட்டில் பரபரப்பு!

சபரிமலை சீசன்: பக்தர்களுக்காக 3 சிறப்பு ரயில்கள்.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

SIR திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் தவெக!.. விஜய் கலந்து கொள்வாரா?!...

புல்வாமா தாக்குதலுக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை: டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments