Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீவா? ஒரு பிடி மண்ணு கூட சொந்தமில்ல... நித்தியை துரத்திய ஈகுவடார் அரசு!

தீவா? ஒரு பிடி மண்ணு கூட சொந்தமில்ல... நித்தியை துரத்திய ஈகுவடார் அரசு!
, வெள்ளி, 6 டிசம்பர் 2019 (18:45 IST)
நித்தியானந்தாவுக்கு தீவு எதையும் விற்கவில்லை என ஈகுவடார் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நித்யானந்தா இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள இந்து ஆன்மீக பக்தர்களால் ஆன்மீக குருவாக ஏற்கப்பட்டவர். இவர் பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் மடங்கள் வைத்துள்ளார். மேலும் பாடசாலைகள் பலவும் வைத்துள்ளார்.
 
நித்யானந்தா மீது சமீப காலமாக பாலியல் வன்முறை, சிறுமிகளை வசியம் செய்து வைத்திருப்பது போன்ற புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. 
 
இதற்கென்று தனி வெப்சைட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தீவை தனி நாடு போல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார் நித்யானந்தா. அதாவது தனி சின்னம் பதித்த தனி கொடி, தனி பாஸ்போர்ட், தென் அமெரிக்க நாட்டின் சட்ட உதவியுடன் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. 
 
இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈடுவடார் அரசு. இது குறித்து டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் சார்பில், நித்தியானந்தாவுக்கு ஈகுவடாரில் அடைக்கலம் ஏதும் தரப்பட்வில்லை. அதேபோல  ஈகுவடார் அருகே தீவும் எதும் விற்கப்படவில்லை. இது தொடர்பாக அவர் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அனைத்தும் தவறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், நித்தியானந்தா அகதியாக தன்னை ஏற்று பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டதாகவும் இதனை அரசு மறுத்துவிட்டதாகவும், தற்போது  ஈகுவடாரில் இருந்து ஹைதி நாட்டுக்கு நித்தியான்ந்தா தப்பித்துவிட்டதகவும் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாலாபிஷேகம்: வைரலாகும் வீடியோ