சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக உபியில் நடந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாகவும், எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு செல்லும்படி மின்னணு இயந்திரம் இருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த விவகாரம் குறித்து குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சிகள் இனிமேல் நடைபெற இருக்கும் இமாசல பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல் ஆகிய அனைத்து தேர்தல்களையும் வாக்குச் சீட்டு முறை மூலம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளன்.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து புகார் கூறிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது. மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பட்டு வரும் நிலையில், எந்திரத்தை ஹேக் செய்வது குறித்து நேரடியாக தேர்தல் ஆணையம் சவால் ஒன்றை விடுத்து உள்ளது.
அதாவது வரும் மே மாதம் தொடக்கம் முதல் நிபுணர்கள், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒரு வாரமோ அல்லது 10 நாட்களோ வந்து அவர்கள் மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்ய முயற்சி செய்யலாம்,” என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. இந்த சவாலை நிறைவேற்ற ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஏற்கனவே ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் இதேபோன்ற ஒருசவாலை விடுத்தது. ஆனால் யாராலும் இயந்திரங்களை ஹேக் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.