Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைப்பு நிதிக்காக இனி ஆபிசுக்கு அலைய வேண்டாம் : வந்து விட்டது புதிய வசதி

Advertiesment
Provident fund
நம்முடைய வைப்பு நிதியை(PF) பெற எளிமையான வழியை அறிமுகப்படுத்தியுள்ளது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வாரியம். 


 

 
வைப்பு நிதியை பொறுத்த வரை, நாம் பணிபுரியும் அலுவலகங்களில் நமது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை நாம் வேலை செய்யும் நிறுவனமும் இட்டு நமது வைப்பு நிதி கணக்கில் வைக்கப்படும்.
 
நாம் அந்த நிறுவனத்தினிலிருந்து விலகும் போது, ஒரு குறிப்பிட்ட விண்ணப்பத்தை நிரப்பி நமது அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை வைப்பு நிதி அலுவலகத்திற்கு அனுப்புவார்கள். அதன் பின் அந்த பணம் நமது வங்கி கணக்கில் செலுத்தப்படும். அல்லது வரைவோலையாகவும் பெறலாம். இதுதான் தற்போது உள்ள நடைமுறை.
 
சில சமயம் சூழ்நிலை காரணமாக, நாம் பணிபுரிந்த அலுவலகம் மூலம் நமது வைப்பு நிதியை நாம் பெற முடியாத நிலை ஏற்படும். எனவே அந்த வைப்பு நிதி நமக்கு கடைசி வரை கிடைக்காமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. இப்படி கோடிக் கணக்கானோர் தங்கள் வைப்பு நிதியை பெற முடியாமல் விட்டு விடுகின்றனர்.
 
அதை தவிர்க்கும் வகையில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வாரியம் ஒரு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதாவது, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள வசதியின் படி, வைப்பு நிதியை பெற நாம் பணிபுரிந்த அலுவலகத்திற்கு நடையாக நடக்க தேவையில்லை.  குறிப்பிட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தொழிலாளர்கள் வைப்பு நிதி அலுவலகத்தில் நேரிடையாக கொடுத்து விட்டால் போதும். 
 
உங்களது ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், டிஜிட்டல் கையெழுத்து ஆகியவற்றை சமர்பித்த பிறகு உங்களுக்கென்று ஒரு பிரத்யோக கணக்கு எண்(UAN) வழங்கப்படும். அதன் பின், நமது வைப்பு நிதி(PF) நமது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். இதுவரை இந்தியாவில் யு.ஏ.எண் எண்ணை இரண்டு கோடி பேர் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil