Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் 8 மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து: ஆய்வு அறிக்கையில் தகவல்!

earthquake
, புதன், 8 பிப்ரவரி 2023 (08:05 IST)
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 8000 க்கும் அதிகமானவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் வலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என்று தெரிகிறது. 
 
இந்த நிலையில் குஜராத் உள்பட 8 இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குஜராத், பீகார், அசாம், இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 
 
மேலும் டெல்லி, என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நிலநடுக்க ஆபத்து இருப்பதாகவும் இந்தியாவின் 59% நிலப்பரப்பு கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனை கைப்பற்றிய அமெரிக்கா... என்ன இருந்தது?