Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

Mahendran
திங்கள், 20 மே 2024 (14:11 IST)
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் நடந்த பார்ட்டியில் போதை மாத்திரைகள், கொகைன்  ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்த பார்ட்டியில் 30 இளம் பெண்கள் உட்பட 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள பண்ணை இல்லத்தில் வாசு என்பவர் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் அதில் 30 பேர் இளம்பெண்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த பார்ட்டி விடிய விடிய நடந்ததாகவும் டான்ஸ், பாடல்கள் ஆட்டம் பாட்டம் ஆகியவை  நடந்த இந்த பார்ட்டிக்காக சுமார் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த வார்த்தையில் போதை மருந்து மற்றும் கொகைன்  பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து பெங்களூர் சிட்டி காவல் நிலைய போலீசார் அதிரடியாக சோதனை செய்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துள்ளதாகவும் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்! தவெக விஜய்யின் இரங்கல் பதிவு!

விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு? பிரச்சாரத்திற்கு முழுவதும் தடை? - என்ன நடக்கும்?

திமுகவின் அஜாக்கிரதையே இவ்வளவு உயிர் பலிகளுக்கு காரணம்!? - அண்ணாமலை கண்டனம்!

கரூர் துயர சம்பவம்! உடனே கரூர் கிளம்பிய மு.க.ஸ்டாலின்! பிரதமர் மோடி இரங்கல்!

விஜய் பிரச்சாரத்தில் துயரம்! கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலி! - கண்ணீரில் கரூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments