கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பது தெரிந்ததே. பால், காய்கறி, மளிகை, மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடியிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்றும் மத்திய மாநில அரசுகள் எதிர்த்துள்ளன
இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் அத்தியாவசிய பொருட்களான பால் காய்கறி மருந்து பொருட்களை வாங்குவதற்கு கூட வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் தேவையான பொருட்களை போன் மூலம் கேட்டால் நாங்களே டெலிவரி செய்து கொடுப்போம் என்றும் கூறியிருக்கிறார்
உபி மாநிலம் முழுவதும் பொருட்களை டெலிவரி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் அரசு செய்திருப்பதாகவும் எனவே அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி நடவடிக்கை அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிரதமரின் ஊரடங்கு உத்தரவை உபி மாநிலம் வெகு சீரியசாக கடைப்பிடிக்க முடிவு செய்திருப்பது முதல்வரின் இந்த உத்தரவில் இருந்து தெரிய வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.