ஆதார் எண் விபரம் குறித்து போனில் யார் கேட்டாலும் சொல்ல வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. ஒருவரின் வங்கி தகவல்களை திருடி அதன்மூலம் அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரம் மூலம் நம் டெபிட் கார்டு தகவல்களை திருடிக் கொண்டு பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.
தற்போது அனைத்து வங்கிகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து ஆதார் எண் தகவல்களை கொண்டு பணத்தை திருட வாய்ப்புள்ளது. எனவே சைபர் கிரைம் போலீஸார் நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தொலைப்பேசி மூலம் வங்கியில் பேசுவதாக கூறி உங்கள் ஆதார் எண் குறித்து கேட்டால் தெரிவிக்க வேண்டாம் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை இதுகுறித்து யாரும் ஏமாந்துவிட்டதாக புகார் அளிக்கவில்லை. இருப்பினும் இதுபோன்ற சம்பங்கள் நடைப்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.