Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”எங்களுக்கு யோகாவும் செய்ய தெரியும்”....யோகாவில் களமிறங்கிய மோப்ப நாய்கள்

Advertiesment
yoga day
, வெள்ளி, 21 ஜூன் 2019 (11:22 IST)
சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படையினருடன் யோகா செய்யும் மோப்ப நாய்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு வருடமும் ஜுன் 21 அன்று, மும்முரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் இன்று சர்வதேச யோக தினம் கடைப்பிடிக்கும் வகையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் யோகா சனம் செய்து வருகின்றனர்.

அதே போல் எல்லை பாதுகாப்பு படையினரும், யோகா செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படையினருடன், மோப்ப நாய்களும் யோகா சனம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எல்லை பாதுகாப்பு படையினர், ஒவ்வொரு யோகாசனங்களையும் செய்ய, அதே போல மோப்ப நாய்களும் யோகா சனங்கள் செய்கின்றன.

மோப்ப நாய்கள் யோகா சனங்கள் செய்வது, பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பண்ணை வீட்டில் விடிய விடிய கூட்டு பலாத்காரம்... பெண்களை நடுரோட்டில் போட்டு சென்ற கொடூரம்!