பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாயை பிடித்து சென்ற தேர்தல் அதிகாரிகள் அந்த நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த வினோத சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்தபோது, 'பாஜகவுக்கு வாக்களித்து நாட்டை காப்பாற்றுங்கள்' என்ற வாசகத்துடன் கூடிய பதாகை ஒன்றுடன் சென்ற நாயை தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர். தேர்தல் பிரச்சாரம் காலக்கெடு முடிந்த பின்னர் அந்த நாய் பிரச்சாரம் செய்ததாகவும், இதனால் அந்த நாயை பிடித்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து அந்த நாயின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்த கூடாது என்று விதியிருந்தும் விதியை மீறி பிரச்சாரம் செய்ததாக நாயின் உரிமையாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வினோத வழக்கால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது