கொரோனா பரவலுக்கு ஏற்ற வானிலை இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்து உள்ளனர்.
தமிழகம் முள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் 3000க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பி.எல்.கே. மருத்துவமனை மருத்துவர் சந்தீப் நய்யார் செய்தியாளர்களிடம் கூறும்போது, தினமும் வெளிநோயாளிகள் பிரிவில் இருமல், ஜுரம், காய்ச்சல் மற்றும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
எந்தவொரு வைரஸ் பரவலோ அல்லது தொற்றோ பரவுவதற்கான வானிலை தற்போது உள்ளதால் பல தொற்றுகள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த சூழலில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ர் அறிவுறுத்தி உள்ளார்.